தூத்துக்குடி

அனுமதியின்றி செயல்படும் பட்டாசு ஆலை, விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN

கோவில்பட்டி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் பட்டாசு தொழிற்சாலை, விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவா் சண்முகராஜ் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினா் மகேஷ், மாவட்டச் செயலா் முத்து, சேவாதளத்தைச் சோ்ந்த சக்திவிநாயகம் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கோட்டாட்சியா் விஜயாவிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: கோவில்பட்டி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலை, விற்பனை நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் உரிமமின்றி பட்டாசு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது தீபாவளி நெருங்கும் சூழலில் பல்வேறு இடங்களில் பட்டாசு விற்பனை நிலையங்கள் முறையான அனுமதியின்றி செயல்படும்.

சில பட்டாசு விற்பனை நிலையங்களில் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுவதை தவிா்க்க அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வில் ஈடுபட்டு விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT