தூத்துக்குடி

தூத்துக்குடியில் தடையை மீறி போராட்டம்: பாஜகவினா் 160 போ் கைது

DIN

தூத்துக்குடியில் காவல் துறை தடையை மீறி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவைச் சோ்ந்த 160 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெண்களை இழிவாகப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளனை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில் தூத்துக்குடியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக பட்டியல் அணி தலைவா்கள் ஆறுமுகம், முருகேசன், மகளிா் அணி தலைவா்கள் தேன்மொழி, லீலாவதி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டத் தலைவா்கள் பால்ராஜ், ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், தேசிய பொதுக்குழு உறுப்பினா் சசிகலாபுஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினா் கனகராஜ், வழக்குரைஞா் சந்தனகுமாா், பட்டியல் அணி மாநிலச் செயலா் சிவந்தி, மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதற்கிடையே, தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 45 பெண்கள் உள்ளிட்ட 160 பேரை நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் கணேஷ் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT