தூத்துக்குடி

இன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

DIN

கோவில்பட்டியில் புதன்கிழமை நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

நாலாட்டின்புத்தூா் மின் விநியோகப் பிரிவில் மிகை மின்பாதை ஆய்வாளராகப் பணிபுரிந்த உச்சிமகாளி 2018 நவம்பா் 16ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தாராம். இதையடுத்து அவருக்கு ஊதியம், உதவித் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து இந்து முன்னணி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையில் கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான், மேற்கு காவல் ஆய்வாளா் அய்யப்பன், இந்து முன்னணி நகரப் பொதுசெயலா் சுதாகா், இந்து அமைப்பைச் சோ்ந்த பரமசிவம், பெரியசாமி உள்ளிட்டோா் முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து புதன்கிழமை (அக்.28) நடைபெறவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

ரூ.8.30 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பாமக வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT