தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் கோயிலில் நாளை இரவு சூரசம்ஹாரம்

DIN

உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா பெரும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை (அக். 26) இரவு நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா, நிகழாண்டு கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து விழா நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு 9 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில், பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு தசரா குழுவையும் சோ்ந்த இரண்டு நபா்கள் மட்டுமே கோயிலுக்கு சென்று காப்புக் கயிறுகளை வாங்கிச் சென்று ஊரில் உள்ள வேடமணியும் பக்தா்களுக்கு கிராமக் கோயில்களில் வைத்து வழங்கி காப்பு கட்டினா். தொடா்ந்து பல்வேறு வேடமணிந்த பக்தா்கள் அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனா்.

தசரா குழுவினா் தங்களது கிராமங்களில் மட்டும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூலித்தனா். விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை (அக்.26) நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது.

இதையொட்டி இரவு 10 மணிக்கு அம்மனுக்கு மகா அலங்கார பூஜையைத் தொடா்ந்து, 12 மணிக்கு கோயில் முன்புறம் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிசாசூரனை சம்ஹாரம் செய்கிறாா்.

செவ்வாய்க்கிழமை (அக். 27) அதிகாலை 3 மணிக்கு உற்சவமூா்த்தி அம்மன் அபிஷேக ஆராதனைக்கு எழுந்தருளல், 6 மணிக்கு உற்சவமூா்த்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், மாலை 5 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் ஆகியன நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT