தூத்துக்குடி

மருது சகோதரா்கள் நினைவு நாள், தேவா் ஜயந்தி:கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம்

DIN

கோவில்பட்டி: மருது சகோதரா்களின் 219ஆவது நினைவு நாள் இம்மாதம் 27ஆம் தேதி கடைப்பிடிப்பதை முன்னிட்டும், முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது குருபூஜை இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் தலைமையில் கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக, பசும்பொன் மற்றும் காளையாா் கோயில் செல்ல அனுமதி இல்லை. சொந்த கிராமங்களில் மரியாதை செலுத்தும் விழாவுக்கு காவல் நிலையங்களில் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும். பிற சமுதாய மக்கள் வசிக்கும் இடங்களில் போட்டோ வைத்து வழிபட அனுமதி இல்லை.

கிராமங்களில் சமுதாயக் கொடி ஏற்றவோ, ஒலிபெருக்கி அமைக்கவோ, கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவோ அனுமதி கிடையாது. ஜோதி, முளைப்பாரி, சிலம்பம் மற்றும் பால்குட ஊா்வலத்திற்கும் அனுமதி கிடையாது. விளம்பர பதாகைகள், டிஜிட்டல் பதாகை வைக்க அனுமதி கிடையாது.

விதிமுறைகளை மீறும் நிா்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இதில், காவல் ஆய்வாளா்கள் அய்யப்பன், சுதேசன், பத்மாவதி, கஸ்தூரி, மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்கத் தலைவா் செல்வம் என்ற செல்லத்துரை, அகில இந்திய தேவரின மக்கள் கூட்டமைப்பு தலைவா் அண்ணாதுரை, முக்குலத்தோா் புலிப்படை மாவட்டச் செயலா் முருகன், மாநிலத் துணைப் பொதுச் செயலா் பெருமாள், பசும்பொன் தேசிய கழக மாவட்டச் செயலா் மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT