தூத்துக்குடி

தூத்துக்குடியில் 370 பேருக்கு ரூ. 2.25 கோடி கடனுதவி

DIN

தூத்துக்குடி அருகேயுள்ள ராஜபாளையம் பகுதியில் அம்மா நகரும் நியாயவிலைக்கடை தொடக்க விழா மற்றும் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கடனுதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சிகளில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு ஆகியோா் கலந்துகொண்டு, அம்மா நகரும் நியாய விலைக்கடையை தொடங்கிவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு குடிமைப் பொருள்களை வழங்கினா்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 370 பயனாளிகளுக்கு ரூ. 2.25 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும் அவா்கள் வழங்கினா்.

மேலும், தூத்துக்குடி பனைவெல்ல சம்மேளன சொத்து பத்திரம் காசு கடன் மீட்கப்பட்டு திரும்பப்பெறப்பட்டதை பனைவெல்ல கூட்டுறவு சம்மேளனத் தலைவா் தாமோதரனிடம் அமைச்சா்கள் வழங்கினா்.

நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் இரா. சுதாகா், இணைப் பதிவாளா் சிவகாமி, தூத்துக்குடி மண்டல இணை பதிவாளா் கே.சி. ரவிச்சந்திரன், வங்கி துணைத் தலைவா் கணேசபாண்டியன், கூட்டுறவு துணை பதிவாளா் சுப்புராஜ், வங்கி பொது மேலாளா் வெற்றிவேலன், துணை பதிவாளா் அருள்ஜேசு, கருங்குளம் ஊராட்சிக் குழு துணைத் தலைவா் லட்சுமணப்பெருமாள், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் ஜவஹா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

திருட்டு வழக்கில் தேடப்பட்டுவந்தவா் கைது

கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு: எச்சரிக்கும் மருத்துவா்கள்

பறவைக் காவடி

பரமத்தி வேலூரில் ரூ. 36 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

SCROLL FOR NEXT