தூத்துக்குடி

‘அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நாளைமுதல் காணொலி மூலம் குறைதீா் கூட்டம்’

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை (நவ. 30) முதல் அரசு வேலை நாள்களில் உள்ள ஒவ்வொரு திங்கள்கிழமையும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியா் மூலமாக மக்கள் குறைதீா் நாள் கூட்டம் காணொலிக் காட்சி முறையில் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தில் கொடுத்து ஒப்புகைச் சீட்டு பெறுவதோடு, காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியரிடமும் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

வட்டாட்சியா் அலுவலகம் வரும் பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் வேண்டும்.

அதன்படி, தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 10.20 மணி வரையிலும், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 10.20 மணி முதல் 10.40 வரையிலும், ஏரல் வட்டாட்சியா் அலுவலகத்தில் 10.40 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்பகல் 11 மணி முதல் 11.20 மணி வரையிலும், சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 11.20 மணி முதல் 11.40 வரையிலும், விளாத்திகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 11.40 - 12 மணி வரையிலும், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நண்பகல் 12 மணி முதல் 12.20 வரையிலும், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் 12.20 மணி முதல் 12.40 மணி வரையிலும், கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் 12.40 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 1 மணி முதல் 1.20 மணி வரையிலும் மனு அளிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT