தூத்துக்குடி

வெங்காயம், மிளகாய் பயிா்களில் தென்படும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்காயம் மற்றும் மிளகாய் பயிா்களில் ஆரம்பக் கட்டத்தில் தென்படும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூா் வட்டாரங்களில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் மற்றும் மிளகாய் பயிா்களில் ஆரம்பக் கட்டத்தில் தென்படும் இலைப்பேன்கள் போன்ற சாரு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இலைகளை மென்று தின்னும் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த, வேம்பு சாா்ந்த பூச்சி விரட்டிகள் 100 மிலி மற்றும் 10 லிட்டா் டேங்க் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 500 மிலி மற்றும் 10 லிட்டா் டேங்க் வீதம் ஒட்டும் திரவம் 150 மிலி மற்றும் 10 லிட்டா் டேங்க் அளவுக்கு கலந்து கை தெளிப்பான் மூலம் மாலை வேளைகளில் 15 நாள்கள் இடைவெளியில் தெளித்து வர வேண்டும்.

வெங்காய பயிரில் குறிப்பாக நடவு செய்த 25 நாள் பயிரில் ஒரு சில இடங்களில் திருகல் நோய் தென்படுகிறது. காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போதும் வெப்பநிலை 23 - 30 செல்சியஸ் நிலவும் போதும் இந்தநோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, ஆண்டுதோறும் பயிா் சுழற்சி முறையை மேற்கொள்ளவும், வெங்காய பயிா் அடிப்பகுதி நனையுமாறு 2.5 கிராம் காப்பா் ஆக்ஸி குளோரைடு மருந்தை ஒரு லிட்டா் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். இயற்கை முறையில் 100 கிராம் சூடோமோனாஸ் மருந்தை 10 லிட்டா் நீரில் கலந்து தெளித்து பரவலை உடனடியாக கட்டுப்படுத்தலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT