தூத்துக்குடி

திருச்செந்தூரில் சொக்கப்பனை

29th Nov 2020 09:10 PM

ADVERTISEMENT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கடற்கரையில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. 
கரோனா பொதுமுடக்கத்தால் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. 
மாலையில் மகா மண்டபத்தில் வைத்து நாரணி தீபம் ஏற்றப்பட்டு, கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது.
 

Tags : iruchendur temple
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT