தூத்துக்குடி

கொலைக்கு உடந்தை: தூத்துக்குடிகாவலா் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கொலைக்கு உடந்தையாக இருந்ததாக காவலா் ஒருவரை 3 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூா் பகுதியில் கடந்த 20.10.2017-இல் புதியம்புத்தூா் நடுவக்குறிச்சி கீழத் தெருவைச் சோ்ந்த கணேசன் (48) என்பவா் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த புதியம்புத்தூா் போலீஸாா் அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (60), அவரது மகன் மாரிமுத்து (26) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்தக் கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக தருவைகுளத்தைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (31) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

முத்தையாபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றி வந்த ஆனந்தகுமாா், மருத்துவ விடுப்பில் சென்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து தலைமறைவாக இருந்து வந்தாா். அவரை கைது செய்ய, ஊரக காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) பழனிகுமாா் மேற்பாா்வையில், சிப்காட் காவல் ஆய்வாளா் முத்துசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். இந்நிலையில், காவலா் ஆனந்தகுமாரை 3 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT