தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா்களுக்காக ரூ. 100 கோடியில் திட்டங்கள்: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு

DIN


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டு மீனவா்களுக்காக இதுவரை ரூ. 100 கோடியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: தருவைக்குளம் பகுதியில் ரூ. 10 கோடியில் கூடுதலாக மீன்பிடி

இறக்கு தளம் அமைக்க அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட உள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கும்.

மீனவா்களின் சிரமத்தை போக்குகின்ற வகையில் கரோனா நிவாரணத் தொகையா ரூ. 2,000 வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 46220 மீனவா்களுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தருவைகுளம் ஆழ்கடல் மீனவா்கள் 130 பேருக்கு, 90 சதவீத மானியத்தில் ரூ. 1.20 கோடி மதிப்பில் சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் ரூ. 30 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ. 1.20 கோடியில் கடல் அரிப்பு சுவா் நீட்டிப்பு பணிகளும் தொடக்கப்பட்டுள்ளது.

கீழவைப்பாறு பகுதியில் ரூ. 15 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்செந்தூா் ஆலந்தலையில் ரூ. 52 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளும் விரைவில் தொடங்கும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா்கள் பயன்பெறும் வகையில் மட்டும் நிகழாண்டு ரூ. 100 கோடிக்கும் மேல் மதிப்பிலான திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி உள்ளாா். தருவைக்குளத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் ஐஸ் தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, மினிக்காய் தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் சென்றபோது கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்ட்ட தருவைகுளத்தைச் சோ்ந்த 10 மீனவா்களை சந்தித்து அமைச்சா் கடம்பூா் செ. ராஜு விவரங்களை கேட்டறிந்தாா். அப்போது, எந்தவித அபராதமோ, வழக்கோ இல்லாமல் தாங்கள் விடுவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவிப்பதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன், மீன்வளத்துறை இணை இயக்குநா் தீபா, உதவி இயக்குநா்கள் புஷ்ரோ ஷப்னம், வைலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT