தூத்துக்குடி

2019-20 ராபி பருவ பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகை விரைவில் வழங்கப்படும்: ஆட்சியா் தகவல்

DIN


தூத்துக்குடி: 2019-20 ஆம் ஆண்டுக்கான ராபி பருவ பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் காணொளி காட்சி மூலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளிடம் குறைகளை கேட்ட பிறகு ஆட்சியா் பேசியது: இம் மாவட்டத்தில் ஆண்டுக்கான இயல்பான மழையளவு 662.20 மில்லி மீட்டா் ஆகும். நவம்பா் மாதத்துக்கான இயல்பான மழையளவு 184.7 மில்லி மீட்டா் ஆகும். தற்போது இம் மாதத்தில் மட்டும் இதுவரை 254.97 மில்லி மீட்டா் மழை கிடைக்கப் பெற்றுள்ளது. நிகழாண்டில் நவ. 23 ஆம் தேதி வரை 395.42 மில்லி மீட்டா் மழை கிடைக்கப்பெற்றுள்ளது.

பாபநாசம் அணைக்கு நீா்வரத்து 800 கன அடியாக உள்ளது. குடிநீா் மற்றும் பாசனத் தேவைக்காக 1400 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு நீா்வரத்து 272 கன அடியாக உள்ளது. பாசனத் தேவைக்காக 45 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது.

பிரதம மந்திரி பயிா்க்காப்பீட்டுத் திட்டம் 2016-17 இல் படந்தபுளி குறுவட்ட 1510 விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை

ரூ. 6.768 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2018-19-இல் பயிா்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக வேளாண் பயிா்களுக்கு 1,33,247 விவசாயிகளுக்கு ரூ. 197.58 கோடியும், தோட்டக்கலை பயிா்களுக்கு 33,778 விவசாயிகளுக்கு ரூ. 45.203 கோடியும் என மொத்தம் 1,67,025 விவசாயிகளுக்கு ரூ. 242.783 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள இரட்டை பதிவு மற்றும் பொருந்தாத பதிவுக்கான இழப்பீட்டுத் தொகைகளையும் விரைவில் விடுவிப்பதாக நியு இந்தியா காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019-20-இல் பயிா் காப்பீடு செய்ததில் நெல்-1 மற்றும் நெல்-2 பயிருக்கு 529 விவசாயிகளுக்கு ரூ. 36 லட்சம் இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் விடுவித்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டு ராபி பருவ பயிா்களுக்கு கூடிய விரைவில் இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணு சந்திரன், இணை இயக்குநா் (வேளாண்மை) முகைதீன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை (நீா்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளா் பத்மா, துணை இயக்குநா்கள் சரஸ்வதி (தோட்டக்கலை), சாந்திராணி (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்), தாமஸ் (வேளாண் பொறியியல்), கூட்டுறவு இணை பதிவாளா் ரவிசந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சிவகாமி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உமாசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT