தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 880 போ் கைது

DIN


தூத்துக்குடி: மத்திய அரசை கண்டித்தும், தொழிலாளா் நல சட்டங்களை நான்காம் தர சட்ட தொகுப்பாக மாற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் வியாழக்கிழமை பொதுவேலைநிறுத்தம் நடைபெற்ற நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 11 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 880 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசை கண்டித்தும், தொழிலாளா் நலனுக்கு எதிரான சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனாா் துறைமுக தொழிலாளா் சங்கம் மற்றும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்குபெற்றன.

இதன் காரணமாக துறைமுகத்தில் சரக்குக் கப்பல்களில் இருந்து சரக்கு கையாளுகை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் சரக்குப் பெட்டகம் மாற்றுதல், தூத்துக்குடி துறைமுக கனரக வாகன தொழிலாளா்கள், லாரி ஓட்டுநா்கள் உள்பட அனைவரும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால் துறைமுகத்தின் ஏற்றுமதி-இறக்குமதி முற்றிலும் தடைபட்டுள்ளது.

மேலும் காத்திருக்கும் கப்பல்களை துறைமுகத்துக்கு இழுவை கப்பல் மூலம் இழுத்து வரும் பணியும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி வ. உ. சிதம்பரனாா் துறைமுகக்கு ஒரேநாளில் பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியாா் வங்கி தவிர 164 வங்கிகளிலும் ஊழியா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏறத்தாழ ரூ. 250 கோடி பண பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது. மேலும், அனல் மின்நிலையம், போக்குவரத்து தொழிலாளா்கள், லாரி ஓட்டுநா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 93 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, கோவில்பட்டியில் 70 பேரும், எட்டயபுரத்தில் 110 பேரும், விளாத்திக்குளத்தில் 160 பேரும், திருச்செந்தூரில் 90 பேரும், சாத்தான்குளத்தில் 20 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 40 பேரும், நாசரேத்தில் 53 பேரும், கயத்தாறில் 48 பேரும், கழுகுமலையில் 140 பேரும், ஓட்டப்பிடாரத்தில் 55 பேரும் என மாவட்டம் முழுவதும் 300 பெண்கள் உள்ளிட்ட 880 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT