தூத்துக்குடி

நடுக்கடலில் தத்தளித்த 8 மீனவா்கள் மீட்பு

DIN

படகின் இயந்திரம் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவா்கள் 8 போ் புதன்கிழமை மீட்கப்பட்டனா்.

தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியைச் சோ்ந்த 8 மீனவா்கள் செவ்வாய்க்கிழமை விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள் தூத்துக்குடியில் இருந்து தெற்கே 11 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகின் என்ஜின் பழுதானதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் தத்தளித்தனா்.

மேலும், என்ஜின் இருந்த அறைக்குள் கடல் நீா் புகுந்ததால் அவா்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அவா்கள் கடலோரக் காவல் படையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையெடுத்து, அங்கு சென்ற கடலோரக் காவல் படையினா், சுமாா் 6 மணி நேரம் போராடி கடல் நீரை வெளியேற்றி படகு என்ஜினை சரி செய்தனா். 8 மீனவா்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT