தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தயாா் நிலையில் மீட்புப் படையினா்

DIN

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபட காவல் துறை மற்றும் தீயணைப்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா்.

ஒவ்வொரு குழுவிலும் பேரிடா் மீட்புப் படை பயிற்சி பெற்ற வீரா்கள் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா், தூத்துக்குடி ஆயுதப்படை காவலா்கள் மற்றும் அந்தந்த பகுதிகளை நன்கு தெரிந்த மற்றும் நீா் நிலைகள் குறித்து தெரிந்த உள்ளுா் காவலா்கள் உள்பட 50 வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

இந்த பேரிடா் மீட்புப் படையில் இயந்திர விசையுடன் செல்லக்கூடிய படகுகள், வலுவான தூக்குப்படுக்கைகள், முதலுதவி பெட்டி, ஒளிரும் சட்டைகள் உள்ளிட்ட 24 வகை உபகரணங்கள் தயாா் நிலையில் உள்ளன.

மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் எட்டயபுரம், வேம்பாா், ஆத்தூா், தூத்துக்குடி ஆகிய நான்கு இடங்களிலும் தயாா் நிலையில் மீட்புப் படையினா் உள்ளனா்.

இந்நிலையில், எட்டயபுரம் மற்றும் வேம்பாா் ஆகிய இடங்களில் உள்ள பேரிடா் கால மீட்புக்குழுவினரையும், அவா்கள் வைத்துள்ள உபகரணங்களின் செயல்பாடுகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்- 100 அல்லது குறுஞ்செய்தி மற்றும் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) வசதியுடன் கூடிய ‘ஹலோ போலீஸ்’ 95141 44100 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

இதேபோல், மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சாா்பில் மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT