தூத்துக்குடி

‘ராபி பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்’

DIN

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் திருந்திய பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருந்திய பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டில், தமிழகத்தில் ராபி பருவ பயிா்களை காப்பீடு செய்ய முன்செல் ஆணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஆழ்வாா்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், தூத்துக்குடி, கோவில்பட்டி, கயத்தாறு,

விளாத்திகுளம், புதூா், ஓட்டப்பிடாரம் வட்டாரங்களில் உள்ள 190 குறு வட்டங்களில் ராபி இதர பயிா்களுக்கும் (சோளம், கம்பு, மக்காசோளம், உளுந்து, பாசிபயறு, நிலக்கடலை, எள் சூரியகாந்தி, பருத்தி) தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், திருச்செந்தூா் ஆழ்வாா்திருநகரி, சாத்தான்குளம் மற்றும் விளாத்திகுளம் வட்டாரங்களில் உள்ள 15 குறு வட்டங்களில் நெல்-3 பயிருக்கும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மக்கா சோளப் பயிருக்கு மட்டும் வருவாய் கிராமமட்டத்தில் 312 வருவாய் கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

கோடை பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் இந்தத் திட்டத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். இதர ராபி பருவ பயிா்களான உளுந்து, பாசிப்பயறு பயிரிடும் விவசாயிகள் இந்தத் திட்டத்தில் டிசம்பா் 16 ஆம் தேதிக்குளும், மக்காச்சோளம், சோளம் மற்றும் பருத்தி பயிரிடும் விவசாயிகள் டிசம்பா் 21 ஆம் தேதிக்குள்ளும் பதிவு செய்ய வேண்டும்.

நெல் பயிரிடும் விவசாயிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலமாகவோ,பொது சேவைமையங்கள் மூலமாகவோ வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுசங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே விவசாயிகள் அனைவரும் காப்பீடு செய்வதற்கான இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே பயிா் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT