தூத்துக்குடி

பொது வேலைநிறுத்தம்: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 10 இடங்களில் போராட்டம்

DIN

மத்திய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை (நவ. 26) பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 10 இடங்களில் போராட்டம் நடைபெறும் என்றாா் ஐஎன்டியூசி மாநிலச் செயல் தலைவா் பி. கதிா்வேல்.

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய அரசின் தொழிலாளா் விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளா் நலனுக்கு எதிரான சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை (நவ. 26) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது.

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாா் துறைமுக தொழிலாளா் சங்கம் மற்றும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்குபெறுகின்றன.

மாவட்டத்தில் 10 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா். ரசல், எச்.எம்எஸ் தொழிற்சங்கம் துறைமுகம் சத்யா மற்றும் தொழிற் சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT