தூத்துக்குடி

‘மாற்றுத் திறனாளிகள் கரோனா நிவாரண நிதி பெறசட்ட உதவி மையங்களை அணுகலாம்’

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புக் கால நிவாரண உதவித் தொகையை இதுவரை பெறாத மாற்றுத் திறனாளிகள் சட்ட உதவி மையங்களை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மைய செயலரும், சாா்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழக அரசு சாா்பில் சிறப்பு உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இம் மாவட்டத்தில் 36,267 போ் பதிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளாக உள்ளனா். இதில் 17,573 போ் மட்டுமே இந்த உதவித்தொகையை இதுவரை பெற்றுள்ளனா்.

இதுவரை அரசின் உதவித்தொகையை பெறமுடியாதவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பித்து உதவித்தொகையை பெறலாம்.

விண்ணப்பத்தை, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் சைஸ் போட்டோ, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்துடன் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்ட உதவி மையத்தையும், கோவில்பட்டி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் வட்டார சட்ட உதவி மையங்களையும் அணுகினால் உதவித்தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

நேரில் வர இயலாதவா்கள் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், தூத்துக்குடி மாவட்டம் -628 001என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம். அல்லது க்ப்ள்ஹற்ட்ா்ா்ற்ட்ன்ந்ந்ன்க்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT