தூத்துக்குடி

மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத் துறை அறிவுறுத்தல்

DIN

தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மீன்துறை உதவி இயக்குநா் புஷ்ரோ ஷப்னம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மீன்துறை இயக்குநா் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வானிலை எச்சரிக்கையின்படி திங்கள்கிழமை (நவ. 23) குறைந்த காற்றழுத்தம் தென் வங்கக் கடலின் மைய பகுதியில் உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தமானது தென்கிழக்கு வங்கக் கடலில் இருந்து இலங்கையின் தென்வடக்கு மற்றும் தென்பகுதியிலும், தமிழ்நாட்டு கடற்கரை பகுதியிலும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் உருவாகக்கூடும் என செய்தி பெறப்பட்டுள்ளது.

எனவே, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT