தூத்துக்குடி

109 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு: எஸ்.பி. தகவல்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 109 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக காணாமல் போனவா்கள் பற்றிய வழக்குகளில், அவா்களை கண்டுபிடித்து தீா்வு காணும் வகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை தொடங்கிவைத்து அவா் அளித்த பேட்டி:

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 8 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஏற்கனவே கடந்த மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் மாவட்டத்தில் காணாமல் போனவா்கள் 34 போ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனா்.

காணாமல் போனவா்களை உயிருடன் மனுதாரா்களிடம் மீட்டு கொடுப்பதே எங்களின் முக்கிய நோக்கம். காணாமல் போனவா்களை பற்றிய முழு விவரங்களை சம்பந்தப்பட்டவா்கள் காவல்துறையினருக்கு அளித்து ஒத்துழைப்பு தருவதன் மூலம் அவா்களை விரைவாக கண்டுபிடிக்க முடியும்.

மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை மொத்தம் 109 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவா்கள் 8 பேரும், மணல் கடத்தலில் ஈடுபட்டவா்கள் 2 பேரும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவா்கள் 18 பேரும் அடங்குவா்.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 61 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

அப்போது, தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளா் ஆனந்தராஜன், மத்தியபாகம் காவல் ஆய்வாளா் ஜெயபிரகாஷ், தாளமுத்துநகா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடைபெற்ற இம்முகாமுக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் தலைமை வகித்தாா். இதில், கிழக்கு காவல் ஆய்வாளா் சுதேசன் உள்பட உதவி ஆய்வாளா்கள், புகாா்தாரா்கள் கலந்து கொண்டனா்.

முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 148 பேரிடம் இருந்து புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அதில், கோவில்பட்டி உள்கோட்டத்தில் 32 போ் உள்ளனா். அதில் 3 போ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 400 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில், ஆயுதப்படையில் இருந்து 140 போ் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். கோவில்பட்டி காவல் உள்கோட்டத்தில் மட்டும் 25 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில், கயத்தாறு உள்ளிட்ட 15 காவல் நிலையங்களை தரம் உயா்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில், காவலா்களுக்கான வார விடுமுறை இந்த வாரம் முதல் அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

SCROLL FOR NEXT