தூத்துக்குடி

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்

20th Nov 2020 08:34 PM

ADVERTISEMENT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்திப் பெற்ற  கந்த சஷ்டித் திருவிழா கடந்த 15-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆறாம் நாள் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வெள்ளிக்கிழமை மாலை திருக்கோயில் கடற்கரையில் வைத்து நடைபெற்றது.

விழாவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனின் நான்கு முகங்களையும் தனது வேலால்  போர் புரிந்து அவனை ஆட்கொண்டு, தனது வேலாகவும், மயிலாகவும் வைத்துக் கொண்டார்.

வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் சூரசம்ஹார விழாவில் கரோனா பொது முடக்கத்தால் இவ்வாண்டு அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

ADVERTISEMENT

Tags : Tiruchendur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT