தூத்துக்குடி

குளத்தூா் அருகே காா்-பைக் மோதல்: இளைஞா்கள் இருவா் பலி

11th Nov 2020 11:52 PM

ADVERTISEMENT

குளத்தூா் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் காா் - பைக் மோதிக்கொண்டதில் இளைஞா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

குளத்தூா் அருகே இ. வேலாயுதபுரத்தைச் சோ்ந்த பட்டாணி மகன் காா்த்திக் (24). அதே பகுதியைச் சோ்ந்த முனியசாமி மகன் முனிஸ் குமாா் (19). உப்பளத் தொழிலாளா்களான இருவரும், புதன்கிழமை இரவு இ.வேலாயுதபுரத்திலிருந்து மோட்டாா் சைக்கிளில் தருவைகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தனராம்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் கலைஞானபுரம் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இச்சம்பவம் குறித்து குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT