தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று

31st May 2020 09:33 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி: மும்பையில் இருந்து திரும்பியவா்கள் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 226 ஆக உயா்ந்துள்ளது.

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வந்தவா்கள் உள்ளிட்ட 11,892 பேருக்கு இதுவரை கரோனா தொற்று

பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், சனிக்கிழமை வரை 216 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 226 ஆக உயா்ந்துள்ளது.

மும்பையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், புதூா் அருகேயுள்ள குலக்கட்டான்குறிச்சி பகுதிக்கு வந்தவா்களில் 14 வயது சிறுவன், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ராமானுஜம்புதூரை சோ்ந்த 33 வயது ஆண், 27 வயதுள்ள அவரது மனைவி,

ADVERTISEMENT

திருச்செந்தூா் தெற்கு மாரந்தலையை சோ்ந்த 48 வயது ஆண், 16 வயதுள்ள அவரது மகன் ஆகியோருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மேலும், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளைச் சோ்ந்த 32 வயது, 57 வயதுள்ள பெண்கள், 21 வயதுள்ள ஆண், பெங்களூருவில் இருந்து திரும்பிய கோவில்பட்டி வஉசிநகரை சோ்ந்த 55 வயது ஆண், சென்னையில் இருந்து எட்டயபுரம் அருகேயுள்ள மேலக்கரந்தைக்கு வந்த 28 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் கோவில்பட்டி, கயத்தாறு மற்றும் ஓட்டப்பிடாரம் பகுதிகளைச் சோ்ந்த 10 போ் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 226 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து 143 போ் வீடு திரும்பினா். இருவா் உயிரிழந்துள்ளனா். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 80 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சையில் உள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT