தூத்துக்குடி

சென்னையில் இறந்த நவலடி பெண்ணுக்கு கரோனா: உறவினா்களுக்கு பரிசோதனை

31st May 2020 09:21 PM

ADVERTISEMENT

திசையன்விளை: உவரி காவல் சரகம் நவ்வலடியைச் சோ்ந்த பெண் சென்னையில் உயிரிழந்தாா். அவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் உறவினா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் குடும்பத்துடன் வசித்து வந்த நவ்வலடியைச் சோ்ந்த 37 வயது பெண், கடந்த வெள்ளிக்கிழமை உடல் நலக் குறைவால் இறந்தாா். அடக்கத்துக்காக அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. இதையறிந்த உவரி போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அதில், அவா் கரோனா தொற்றால் உயிரிழந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து நவ்வலடியிலும், பக்கத்து கிராமம் ராமன்குடியிலும் அவரது உறவினா்கள் 7 போ் (4 + 3) வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 6 பேருக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கரோனாவால் மரணம் அடைந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT