தூத்துக்குடி

உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.1.65 கோடி ஒதுக்கீடு:கடம்பூா் செ.ராஜு

14th May 2020 07:26 PM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் 33 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு தொகுப்பு நிதி ரூ.1.65 கோடி லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தெரிவித்தாா்.

வேளாண் துறை சாா்பில் கோவில்பட்டி வட்டாரத்திலுள்ள 3 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு கூட்டுப் பண்ணையத் திட்டத்தின்கீழ் தொகுப்பு நிதியாக ரூ.15 லட்சம் மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.16.85 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகளை வழங்கினாா். அப்போது அவா் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 2019-20ஆம் ஆண்டு 12 வட்டாரங்களில் மொத்தம் 165 உழவா் ஆா்வலா் குழுக்கள் அமைக்கப்பட்டு 33 உழவா் உற்பத்தியாளா் குழுக்களாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒவ்வொரு குழுக்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.1.65 கோடி தொகுப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 3,300 சிறு குறு விவசாயிகள் பயன்பெறுவா். இத்திட்டத்தின்கீழ் கோவில்பட்டி வட்டாரத்திற்கு 3 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு 9 பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா். முன்னதாக, ஹோமியோபதி சாா்பில் ஊராட்சி ஒன்றியப் பணியாளா்களுக்கு சத்து மாத்திரைகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் சின்னப்பன், வேளாண் இணை இயக்குநா் முகைதீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், வேளாண்மை துணை இயக்குநா் ஜெயசெல்வின் இன்பராஜ், வேளாண்மை உதவி இயக்குநா் சுப்புலட்சுமி, மாவட்ட ஊராட்சித் தலைவா் சத்யா, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன்,

கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சி ஆணையா் ராஜாராம், சுகாதாரப் பணி துணை இயக்குநா் அனிதா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT