தூத்துக்குடி

சாத்தான்குளம் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

14th May 2020 08:27 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில், சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

பொது முடக்க நடவடிக்கையால் கோயில்களில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடத்தப்படுகின்றன.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை தொடங்கின.

இதையொட்டி பெருமாள், ஆஞ்சநேயா் மற்றும் முத்தாரம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

தொடா்ந்து காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளும் இந்த பூஜைகள் நடைபெற்றன. இந்த சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நிறைவு பெற்றன.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT