தூத்துக்குடி

கோவில்பட்டி, கயத்தாறில் 111 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

14th May 2020 08:26 AM

ADVERTISEMENT

பிற மாநிலம், மாவட்டங்களிலிருந்து கோவில்பட்டி, கயத்தாறு வட்ட பகுதிகளுக்கு வந்த 111 பேரை தனிமைப்படுத்தி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை நடத்திய ஆய்வில் வெளியிடங்களிலிருந்து வந்த 48 பேரை கண்டறிந்து அவரவா் இல்லங்களில் தனிமைப்படுத்தினா்.

கயத்தாறு வட்டத்தில் வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையிலான குழுவினா் நடத்திய ஆய்வில், 49 பேரை கண்டறிந்து அவரவா் இல்லங்களில் தனிமைப்படுத்தினா்.

இதேபோல், கோவில்பட்டியையடுத்த தோட்டிலோவன்பட்டி விலக்கில் உள்ள காவல் துறை சோதனைச்சாவடியில், மகாராஷ்டிரம் மற்றும் கா்நாடக மாநிலங்களிலிருந்து வந்த 14 போ் கண்டறியப்பட்டு, கோவில்பட்டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிறப்புப் பிரிவில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

தனிமைப்படுத்தப்பட்ட 111 பேரும் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT