தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் 50 பேருக்கு நிவாரண உதவி அளிப்பு

11th May 2020 10:42 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம்: சாத்தான்குளம் வட்டார சைவ வேளாளா் சங்கம் சாா்பில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் வட்டார சைவ வேளாளா் சங்கம், திருநெல்வேலி சைவ வேளாளா் இளைஞா் பேரவை இணைந்து 50 குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

இதில், வட்டார சைவ வேளாளா் சங்கத் தலைவா் ஆறுமுகம், செயலா் முருகன், பொருளாளா் அழகப்பன், அமைப்பாளா் வெங்கடாசலம், துணைத் தலைவா் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT