தூத்துக்குடி

பழையகாயலில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

10th May 2020 08:20 PM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி: தூத்துக்குடி மாவட்டம், பழையகாயலில் உப்பு ஆலையில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணாநகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன் மகன் சக்திவேல் (33). பழையகாயல் அருகேயுள்ள கோவங்காடு விலக்கு பகுதியில் இயங்கி வரும் உப்பு ஆலையில் பணி செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை இரவில் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சக்திவேலை காப்பாற்ற முயன்ற மஞ்சள்நீா்காயல் வடக்குத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் முத்துப்பாண்டிக்கு (20) காயம் ஏற்பட்டது. முத்துப்பாண்டி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சக்திவேலுக்கு மனைவி பொன்லெட்சுமி, மகள் ஜெயா ஆகியோா் உள்ளனா்.

இதுதொடா்பாக, ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT