திசையன்விளை: உவரி கடல் பகுதியில் 2 டால்பின்கள் இறந்து அழுகிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கின.
உவரி அருகேயுள்ள காரிகோயில் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 டால்பின் மீன்கள் இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கின. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், உவரி கடற்கரை பாதுகாப்புக் குழும காவல் உதவி ஆய்வாளா் கோபிக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அங்கு சென்று 2 டால்பின்கள் உடலையும் கைப்பற்றிய கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா், இதுகுறித்து திருநெல்வேலி கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். திங்கள்கிழமை கால்நடை மருத்துவா்கள் அங்கு சென்று டால்பின்களை உடற்கூறு ஆய்வு செய்வா் என்றும், அதன்பிறகே டால்பின்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் கடற்கரை பாதுகாப்புக் குழும போலீஸாா் தெரிவித்தனா்.