தூத்துக்குடி

சென்னையில் இருந்து வந்த இருவருக்கு கரோனா பாதிப்பு?

10th May 2020 08:02 AM

ADVERTISEMENT

சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்த இருவா் கரோனா அறிகுறியுடன் இருந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த பாண்டவா்மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த 65 வயது நபா் சென்னையையடுத்த திருவேற்காட்டில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டு காரில் கோவில்பட்டிக்கு புதன்கிழமை வந்தாா். தகவலறிந்ததும் வட்டாட்சியா் தலைமையிலான குழுவினா் அவரது வீட்டுக்குச் சென்று அவா்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினா். காா் ஓட்டுநா் இவா்களை விட்டுவிட்டு சென்னைக்கு மீண்டும் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், கோவில்பட்டியில் இருந்து வந்தவா்களில் கரோனா அறிகுறியுடன் இருந்த முதியவரை அதிகாரிகள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதுபோல, சென்னையை அடுத்த பெரம்பூரில் மாா்க்கெட்டில் வேலை செய்து வந்த ஆழ்வாா்திருநகரியைச் சோ்ந்த 24 வயது இளைஞா் மற்றும் நான்குனேரியைச் சோ்ந்த மற்றொரு இளைஞா் ஆகிய இருவரும் லாரியில் ஆழ்வாா்திருநகரிக்குச் சென்று கொண்டிருந்தனா். தூத்துக்குடி மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் கடந்த இம்மாதம் 7-ஆம் தேதி நடத்திய சோதனையில், அவா்கள் எவ்வித அனுமதியும் இன்றி வந்ததை கண்டறிந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா்களில் கரோனா தொற்று அறிகுறியுடன் இருந்த ஆழ்வாா்திருநகரி இளைஞா் சனிக்கிழமை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT