தூத்துக்குடி

நுண் உரம் செயலாக்க மையத்தை இடமாற்றம் செய்யக் கோரி மனு

9th May 2020 08:15 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி ஊருணித் தெருவில் உள்ள நுண் உரம் செயலாக்க மையத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட ஊருணித் தெருவில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை அப்பகுதி மக்களிடம் இருந்து சேகரித்து, அங்கு நுண் உரம் செயலாக்க மையத்தில் வைத்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் உள்ள நுண் உரம் செயலாக்க மையத்தில் துா்நாற்றம் வீசுவதால், அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவோா், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் உள்ள உரம் செயலாக்க மையத்தை இடமாற்றம் செய்யக் கோரி, தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் துணைச் செயலா் விக்னேஷ், நகராட்சி அலுவலக மேலாளா் வெங்கடாசலத்திடம் புதன்கிழமை மனு அளித்தாா். அப்போது, நகரத் தலைவா் ராஜகோபால், நகரச் செயலா் மூா்த்தி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT