தூத்துக்குடி

பண்டாரபுரத்தில் ஆதரவற்றவா்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கல்

30th Mar 2020 11:13 PM

ADVERTISEMENT

 

ஊரடங்கு உத்தரவையொட்டி பண்டாரபுரத்தில் வேலையில்லாமல் மற்றும் ஆதரவற்றவா்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

பண்டாரபுரத்தைச் சோ்ந்த தொழிலதிபா் சிங்கப்பூா் ஜேக்கப் ராஜா, வறுமையில் வாடுபவா்கள் மற்றும் ஆதரவற்றவா்களுக்கு உதவிடும் வகையில் தேவையான அத்தியாவசிய பொருள்கள் வழங்கி இருந்தாா்.

இதை பண்டாரபுரத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் ஜேக்கப், ஏசா, ராஜா, ஜெயகணேஷ், சுயம்பு, ஜெபராஜ் ஆகியோா் அன்றாட வேலைக்கு செல்பவா்கள், ஆதரவற்றவா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கனிகளை வழங்கினா். முதற்கட்டாமாக 20 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT