தூத்துக்குடி

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு வழிபாடு

23rd Mar 2020 01:18 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தா் கோயில் பங்குனி சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீசிவகாமி அம்மாள், ஸ்ரீஅழகிய கூத்தா் மற்றும் பரிவார மூா்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் , ஆராதனை, சிறப்பு யாகசாலை பூஜை, மாலையில் நந்தீயம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, அலங்கார பூஜை,

தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து நந்தியம் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT