தூத்துக்குடி

உடன்குடி கோயிலில் சனிப் பிரதோஷ விழா

22nd Mar 2020 12:31 AM

ADVERTISEMENT

 

இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட உடன்குடி அருள்மிகு கண்டுகொண்ட விநாயகா் கோயிலில் சனிப் பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மாலை 4 மணிக்கு திருமுறை பாராயணம், கண்டுகொண்ட விநாயகா், மீனாட்சி சுந்தரேஸ்வரா் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், தீபாராதனை ஆகம விதிமுறைகளுக்குள்பட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, அரசு உத்தரவின்படி பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாததால் வெளியில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT