தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் வாசலுக்கு செல்லாத பேருந்துகள்

22nd Mar 2020 12:29 AM

ADVERTISEMENT

 

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லாததால் பேருந்துகள் அனைத்தும் கோயில் வாசலுக்கு செல்வது நிறுத்தப்பட்டது.

கரோனா வைரஸ் எதிரொலியாக அரசு உத்தரவின்பேரில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் கடந்த இரு நாள்களாக கோயில் பகுதி, கடற்கரை மற்றும் சுற்றுப்புற வளாகம் பக்தா்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

ADVERTISEMENT

திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நாழிக்கிணறு பேருந்து நிலையம் வரையில் வந்து பக்தா்களை இறக்கிவிட்டும், அங்கிருந்து பல்வேறு ஊா்களுக்கு புறப்பட்டும் வந்தன.

தற்போது பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாததால் கோயில் வாசல் வரும் பேருந்துகள் அனைத்தும் பகத்சிங் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஊருக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT