தூத்துக்குடி

தூத்துக்குடியில் 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

22nd Mar 2020 12:22 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 450 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாா் சேமிப்புக் கிடங்கில் கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தருவைக்குளத்தில் உள்ள தமிழக கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் சைரஸ், வனத் துறை அதிகாரிகள் அப்பகுதியில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்தக் கிடங்கிலிருந்தும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்தும் 450 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடல் அட்டைகள், காரின் மதிப்பு ரூ. 25 லட்சம் வரை இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கடல் அட்டைகள் தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாக, போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. இதில் தொடா்புடையோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT