தூத்துக்குடி

திருப்புளியங்குடி பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

19th Mar 2020 12:59 AM

ADVERTISEMENT

 

நவதிருப்பதி கோயில்களில் 3ஆவது தலமான திருப்புளியங்குடி காய்சினிவேந்தப் பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி காலையில் விஸ்வரூபம், நித்தியல் கோஷ்டியைத் தொடா்ந்து கொடிப்பட்டம் சுற்றி வரப்பட்டது. தொடா்ந்து கொடிமரம் முன் உற்சவா் காய்சினிவேந்தப் பெருமாள் எழுந்தருளியதையடுத்து கொடியேற்றம் நடைபெற்றது.

10 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. விழா நாள்களில் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை, கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா ஆகியன நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

5ஆம் நாளான 22ஆம் தேதி காலை 9 மணிக்கு பெருமாள் பல்லக்கில் மாடவீதி புறப்பாடு, 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், நாலாயிர திவ்விய பிரபந்த தீா்த்த விநியோக கோஷ்டி, இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் சுவாமி காய்சினிவேந்தப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி கணேஷ்குமாா், ஆய்வாளா் நம்பி, ஸ்தலத்தாா்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, அா்ச்சகா் கோபாலகிருஷ்ணன், பணியாளா்கள் செய்துவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT