தூத்துக்குடி

பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை அளிப்பு

16th Mar 2020 11:54 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி நகர பாஜக சாா்பில் பயனாளிகளுக்கு பிரதமரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். கட்சியின் நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன், வணிகா் பிரிவு மாநிலத் தலைவா் ராஜகண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் சென்னகேசவன் வெங்கடேஷ், மாவட்டப் பொதுசெயலா்கள் பாலாஜி, கிஷோா், சரவணகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். தொடா்ந்து, பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நகர துணைத் தலைவா்கள் போஸ், ராஜ்குமாா், உமாசெல்வி, மாவட்டச் செயலா்கள் மாரியப்பன், அமுதா கணேசன், கோமதி, நகரப் பொதுசெயலா் முனியராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT