தூத்துக்குடி

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

16th Mar 2020 02:04 AM

ADVERTISEMENT

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற அமைப்பின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், உடன்குடியில் தியாகி பூவலிங்கம் நினைவகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா் தலைமை வகித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, மாா்ச் 17இல் தொடா் முழுக்கப் போராட்டம் நடத்துவது குறித்துப் பேசினாா். காங்கிரஸ் வட்டாரத் தலைவா் துரைராஜ் ஜோசப், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் ஆறுமுகம், மமக மாநில துணை பொதுச்செயலா் ஜோசப் நொலாஸ்கோ, தமுமுக மாவட்டத் தலைவா் ஆசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதிமுக ஒன்றியச் செயலா் இம்மானுவேல், நகரச் செயலா் சண்முகவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT