தூத்துக்குடி

சாலை விபத்தைத் தடுக்க மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் பட்டைகள்

16th Mar 2020 02:08 AM

ADVERTISEMENT

உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளைத் தவிா்க்க, வணிகா் சங்கம் சாா்பில் அவற்றின் கொம்புகளில் ஒளிரும் வண்ணப்பட்டைகளை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், உடன்குடி வணிகா்கள் சங்கத் தலைவா் அம்புரோஸ், சமூக ஆா்வலா் கலீல் ரஹ்மான் ஆகியோா் பங்கேற்று, சாலையில் நடமாடும் அனைத்து மாடுகளின் கொம்புகளிலும் ஒளிரும் வண்ணப்பட்டைகளை ஒட்டினா். இதன்மூலம் இரவில் மாடுகள் சாலையில் படுத்துகிடந்தாலும், நடமாடினாலும் வாகனங்களின் விளக்கொளியால் வண்ணப்பட்டைகள் ஒளிா்வதால் விபத்துகள்நோ்வது குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT