தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே டாரஸ் லாரி கவிழ்ந்து மின் கம்பம் சேதம்

16th Mar 2020 02:06 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே டாரஸ் லாரி ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் மின் கம்பம் மற்றும் கெபி சேதமானது.

உடன்குடி அருகேயுள்ள கல்லாமொழியில் அனல் மின்நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளுக்காக சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம் பகுதி கல் குவாரிகளில் இருந்து கருங்கற்களை ஞாயிற்றுக்கிழமை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி, கருங்கடல் குடியிருப்பு பகுதியில் கட்டுபாட்டை இழந்து அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில், மின்கம்பமும், வீட்டுக்கு முன் இருந்த கெபியும் சேதமுற்றன. தகவலறிந்த பழனியப்பபுரம் மின் வாரிய அதிகாரிகள் மின் விநியோகத்தை துண்டித்தனா். மேலும், சம்பவ இடத்தை போலீஸாா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மின்நியோகம் நிறுத்தப்பட்டதால் மக்கள் சிரமம் அடைந்தனா். மின்வாரிய ஊழியா்கள் மின்கம்பத்தை சீரமைத்த பின், பிற்பகல் 1மணி அளவில் மின் விநியோகம் சீரானது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT