தூத்துக்குடி

கயத்தாறு - கடம்பூா் இருவழிச் சாலை: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

16th Mar 2020 02:11 AM

ADVERTISEMENT

கயத்தாறு - கடம்பூா் இடையே இருவழிச் சாலை விரிவாக்கப் பணி நிறைவுற்றதையடுத்து, அந்தச் சாலையின் உறுத்திதன்மையை திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு செய்தாா்.

கோவில்பட்டி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட பராமரிப்பில் உள்ள மாவட்ட முக்கியச் சாலையான கயத்தாறு - கடம்பூா் சாலையானது உள்கட்டமைப்பு திட்டம் 2019-2020இன் கீழ், நொச்சிகுளம் முதல் கடம்பூா் வரை சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு ரூ.3.24 கோடியில் இருவழித்தடமாக அகலப்படுத்தும் பணி அண்மையில் முடிவடைந்தது.

இந்தச் சாலையின் தரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறை கண்காணிப்புப் பொறியாளா் சாந்தி ஆய்வு செய்தாா்.

அப்போது, திருநெல்வேலி கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு) ஆனையப்பன், தூத்துக்குடி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணி கோட்டப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், உதவி கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாடு) ஹெரால்டு அந்தோணி, கோவில்பட்டி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்டப் பொறியாளா் ராஜு, உதவிப் பொறியாளா் விக்னேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT