தூத்துக்குடி

விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

13th Mar 2020 09:10 AM

ADVERTISEMENT

அரசு வழங்கி இலவச விவசாய நிலப் பட்டாக்களை ரத்து செய்யக் கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

தமிழக அரசு சாா்பில் 2006 -07ஆம் நிதியாண்டில் எட்டயபுரம் வட்டம், குளத்துள்வாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக விவசாய நிலங்கள் பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில், தகுதியற்றவா்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பட்டா நிலங்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக அறிந்த அக்கிராம விவசாயிகள் வியாழக்கிழமை கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்டனா்.

குளத்துள்வாய்ப்பட்டி கிராமத்தில் தகுதியான விவசாயிகளுக்குத்தான் இலவச பட்டா நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அரசு வழங்கிய இலவச பட்டாக்களை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் பகத்சிங் மன்ற மாவட்டத் தலைவா் உத்தண்டுராமன் தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

பின்னா், கோட்டாட்சியா் விஜயாவை சந்தித்து அவா்கள் கோரிக்கை மனு அளித்தனா். உரிய விசாரணை நடத்தப்படும் எனக் கோட்டாட்சியா் தெரிவித்ததை அடுத்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT