தூத்துக்குடி

பாலவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

13th Mar 2020 09:05 AM

ADVERTISEMENT

ஓட்டப்பிடாரம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாலவிநாயகா் கோயிலில் 9 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் புதன்கிழமை முதல் கால யாகசாலப் பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை காலையில் கணபதி ஹோமம், 2 மற்றும் 3 ஆம் கால யாகசால பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து, விமான கலசத்திற்கு புனித நீா் ஊற்றுதல், சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஓட்டப்பிடாரம் மின்வாரிய உபகோட்ட பொறியாளா்கள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT