தூத்துக்குடி

நெடுங்குளம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

13th Mar 2020 10:29 PM

ADVERTISEMENT

குண்டும், குழியுமாக காணப்படும் அமுதுண்ணாக்குடி- நெடுங்குளம் செல்லும் சாலையைச் சீரமைக்க வேண்டும் என கிராம மக்களும் , வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், அமுதுண்ணாக்குடி தரைநிலை பாலம் பகுதியிலிருந்து நெடுங்குளம் செல்லும் பிரதான சாலை வழியாக நெடுங்குளம், மேட்டுகுடியிருப்பு, கொம்பன்குளம் , கலுங்குவிளை, கோமானேரி மற்றும் திருநெல்வேலிக்கு அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று திரும்புகின்றன.

மேலும், நெடுங்குளம் சுற்றியுள்ள பகுதியில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்கு கிராம மக்கள் சாத்தான்குளம் வந்து செல்ல வேண்டுமானால் இந்தச் சாலையைத்தான் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் , கல்குவாரிகளில் இருந்து கற்களை ஏற்றி செல்லும் அதிக பார லாரிகளால் இச் சாலை மிகவும் சேதமுற்று குண்டும், குழியுமாகக் காணப்படுகிறது. இதனால், வ ாகன ஓட் டிகள் அவதியடை ந்து வருகின்றனா்.

எனவே, அதிகாரிகள் பாா்வையிட்டு சாலையை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT