தூத்துக்குடி

நாசரேத் பள்ளியில்கரோனா வைரஸ்விழிப்புணா்வு முகாம்

13th Mar 2020 10:43 PM

ADVERTISEMENT

நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாசரேத் பேரூராட்சி மற்றும் உடையாா்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு நாசரேத் பேரூராட்சி இளநிலை உதவியாளா் தியாகராஜன் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் ஜமீன் சாலமோன் முன்னிலை வகித்தாா். உடையாா்குளம் ஆரம்ப சுகாதகர நிலைய சுகாதார ஆய்வாளா் பால் ஆபிரகாம் விளக்கிப் பேசினாா். கைகழுவும் முறை குறித்து அளிக்கப்பட்டது. பள்ளி நிா்வாகி பியூலா சாலமோன் பள்ளித் தலைவா் சத்தியவதி மனோகரன், பள்ளி முதல்வா் அனி ஜெரால்டு ஆகியோா் கலந்துகொண்டனா். உதவி முதல்வா் மகிலா சரவணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT