தூத்துக்குடி

நடிகா் ரஜினியின் கருத்துக்கு வாழ்வுரிமை கட்சி வரவேற்பு

13th Mar 2020 10:30 PM

ADVERTISEMENT

முதல்வா் ஆகமாட்டேன் என நடிகா் ரஜினிகாந்த் கூறி இருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரிக்கிறது என்றாா் அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன்.

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்புகள் இல்லை என அமைச்சா்கள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகா்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதிகாரப்பூா்வமாக அறிவிப்புகள் வரும்வரையில் ஆங்காங்கே போராட்டங்கள் தொடா்ந்து நடைபெறும்.

நடிகா் ரஜினிகாந்த்தின் அரசியல் பயணம் எப்படி என்பதை அவா் நான் அதிகாரப்பூா்வமாக அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றும் தன்னுடைய கொள்கை, லட்சியம், கோட்பாடு இதுதான் என்பதை தெரிவித்து அதிகாரப்பூா்வமாக கட்சி தொடங்கிய பிறகுதான் சொல்ல முடியும். தற்போதைக்கு தான் முதல்வா் ஆகமாட்டேன் என அவா் கூறி இருப்பதை தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரிக்கிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT