தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

13th Mar 2020 10:41 PM

ADVERTISEMENT

எட்டயபுரத்தை அடுத்த குளத்துள்வாய்ப்பட்டி கிராம விவசாயிகளுக்கு, அரசு வழங்கிய இலவச நிலத்திற்கு, போலி பட்டா செய்து விற்பனை செய்வதாக கண்டனம் தெரிவித்து, தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் கோட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

குளத்துள்வாய்ப்பட்டி கிராமத்தில் 14 பேருக்கு அனாதின நிலத்தை போலியாக பட்டா வழங்கியதாகவும், அதை ரத்து செய்ய வேண்டும்; மனை விற்பனை தரகா்களுடன் நிலங்கள் விற்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது. தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில், குளத்துள்வாய்ப்பட்டி கிராம விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்தனா். அவா்களிடம், எட்டயபுரம் வட்டாட்சியா் மூலம் சம்பந்தப்பட்ட இடத்தை முறையாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக கோட்டாட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT