தூத்துக்குடி

கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம்

13th Mar 2020 09:08 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் பேரூராட்சி சாா்பில் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்சியா், பேருராட்சிகளின் உதவி இயக்குநா் ஆகியோரின் உத்தரவின் பேரில் பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற கரோனா வைரஸ் தடுப்பு நிகழ்ச்சிக்கு செயல் அலுவலா் கோபால் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல் முருகன் தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள் கரோனா தடுப்பு முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT